PUBLISHED ON : நவ 27, 2024 12:00 AM

திருப்பூர் அருகே பெருமாநல்லுாரில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றார்.
அப்போது பேசுகையில், 'பழனிசாமி முதல்வராக இருந்த போது, திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் திட்டத்துக்காக, 1,400 கோடி ரூபாய், அவிநாசி - அத்திக்கடவு திட்டத்திற்கு, 1,650 கோடி ரூபாய் என, கோடி கோடியாக கொட்டி மக்கள் பணிகளை செய்தார்.
'தற்போதைய முதல்வர் ஸ்டாலின், மொத்தமாக, 30 கோடி ரூபாய்க்கு திட்டம் தயாரித்து, அதிலேயே கருணாநிதிக்கு மூன்று சிலைகளை திறந்து விடுகிறார். கருணாநிதிக்கு சிலை திறப்பது மட்டுமே அவரின் பெரிய சாதனையாக இருக்கிறது' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இவங்க ஆட்சியில் எல்லாத்துக்கும், 'அம்மா' பெயரை வச்சாங்க... அவங்க ஒருபடி மேல போய், கருணாநிதி பெயரை வைப்பது மட்டுமல்லாமல், கிடைக்கிற இடத்துல எல்லாம் சிலையும் வைக்குறாங்க... வழிகாட்டியே இவங்க தானே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

