/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'துண்டுக்கு தானே அடிச்சுக்கிறாங்க!'
/
'துண்டுக்கு தானே அடிச்சுக்கிறாங்க!'
PUBLISHED ON : பிப் 25, 2026 03:09 AM

சென்னை பெரம்பூரில், கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பேசுகையில், 'நான் முதல்வன் திட்டம் மூலம், 30 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நான் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற 2021ம் ஆண்டிலேயே, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்கு விண்ணப்பித்து, தற்போது முடித்துள்ளேன்.
'அமைச்சராக இருந்தாலும் படிப்பு முக்கியம் என்பதை உணர்த்தவே, இதை செய்தேன். பதவி என்பது தோளில் போடும் துண்டு; படிப்பு என்பது நாம் உடுத்தும் உடை. இதை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும்' என்றார்.
இதை கேட்ட மாணவர் ஒருவர், 'ஆனா, நம்ம அரசியல்வாதிகள் துண்டுக்கு தானே அடிச்சுக்கிறாங்க...' என முணுமுணுக்க, சக மாணவர்கள் சிரித்தனர்.

