PUBLISHED ON : ஏப் 12, 2025 12:00 AM

தமிழகத்துக்கு கல்வி நிதி தர மறுப்பதாகக் கூறி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, சேலம் மாவட்டம், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே, தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்காக, ராணிப்பேட்டை சாலையை மறித்து மேடை அமைத்து, ஸ்பீக்கர் வைத்தனர். மேளம் அடித்து, ஒப்பாரி வைத்து, மத்திய அமைச்சர் உருவ பொம்மையை பாடையில் துாக்கி வந்து எரித்து கோஷமிட்டனர்.
இவ்வளவு நடந்தும், அந்த இடத்திற்கு ஆத்துார் டவுன் போலீசார் ஒருவர்கூட வரவில்லை. மத்திய அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பை தடுக்கவும் இல்லை. இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலையின் நடுவில் உருவ பொம்மை எரிந்து, தானாகவே அணைந்தது.
அந்த வழியே சென்ற அ.தி.மு.க., தொண்டர் ஒருவர்,'இதே நாம போராட்டம் நடத்தியிருந்தா, அஞ்சே நிமிஷத்துல அள்ளி வேன்ல ஏத்திட்டு போயிருப்பாங்க...' என, முணுமுணுத்தபடியே நடந்தார்.

