PUBLISHED ON : ஏப் 13, 2026 12:34 AM

சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., கூட்டணி கட்சியான, மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் சுந்தர்ராஜனை ஆதரித்து, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அவர் பேசுகையில், 'முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னர் வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஒன்றில், 'வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும்' என கூறியிருந்தார். அதன்படி, அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டன.
'அந்த தொலைக்காட்சி பெட்டிகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. 30 ஆண்டுகள் கடந்த நிலையில், அந்த தொலைக்காட்சி பெட்டிகள் நல்ல நிலையில் இயங்குகின்றன' என்றார்.
இதை கேட்ட ஒருவர், 'ஆனா, 2006ல் தானே கருணாநிதி, 'டிவி' தந்தாரு... 20 வருஷம் தானே ஆச்சு... 30 வருஷம்னு தப்பா சொல்றாங்களே...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர், 'அட, வாய் தவறி சொல்லியிருப்பாங்க... விட்டு தள்ளுப்பா...' என்றபடி, அங்கிருந்து கிளம்பினார்.
