PUBLISHED ON : ஜூன் 16, 2026 12:00 AM

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மதுரையில் சமீபத்தில் பேட்டி அளித்தார்.
அவர் கூறும்போது, 'விஜய் சினிமா, 100 நாட்கள் ஓடியதாக பெருமையாக பேசலாம். ஆனால், அவரது ஆட்சி 30 நாட்களிலேயே திக்கி திணறிதான் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிப்பது, அவர் ஓட்டுவதை பொறுத்துதான் உள்ளது. இந்த ஆட்சிக்கு கம்யூனிஸ்ட், வி.சி.க.,வினர் முட்டு கொடுத்துள்ளனர். எப்போது, 'முட்டு'களை எடுப்பர் என்பதை, மறைமுக ஆதரவு தெரிவித்துள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் கேளுங்கள்.
'ராகுல் இரட்டை வேடம் போடுபவர் என்பதை தி.மு.க., இப்போதுதான் உணர்ந்துள்ளது. ஆனால், இதை நாங்கள் 15 ஆண்டுகளாக சொல்கிறோம். ராகுல், தி.மு.க., முதுகில் குத்தியதால், 'இண்டி' கூட்டணி வெலவெலத்து போய் விட்டது' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இண்டி கூட்டணி வெலவெலத்து போறது இவங்களுக்கு தானே லாபம்' எனக் கூற, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
