PUBLISHED ON : ஏப் 20, 2026 01:42 AM

வேலுார் மாவட்டம், அணைக்கட்டு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஊசூரில், அ.தி.மு.க., வேட்பாளர் வேலழகனை ஆதரித்து, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலர், நடிகை கவுதமி, சமீபத்தில் பிரசாரம் செய்தார்.
அப்போது, அங்கிருந்த டீக்கடையில் டீ போட்டு கொடுத்து, வாக்காளர்களை கவர்ந்தார். முன்னதாக, 'எனக்கு காபி மட்டும் தான் நல்லா போட தெரியும்; டீ போட தெரியாது' என, கவுதமி கூறினார். உடனடியாக, 'இன்ஸ்டன்ட்' காபி பவுடரை, டீ மாஸ்டர் எடுத்து கொடுத்தார். ஆயினும், அதை வாங்காமல், ஒரு வழியாக, டீ போட்டுக் கொடுத்து நடிகை கவுதமி ஓட்டு சேகரித்தார்.
இதை பார்த்த வாடிக்கையாளர் ஒருவர், 'தேர்தல் வந்தாலே, அரசியல்வாதிகள் டீ ஆத்துறது, வடை தட்டுறது, புரோட்டா போடுறதுன்னு நுாதனமா ஓட்டு கேட்கிறாங்க... தேர்தலுக்கு பிறகு, இவங்களை நாம தேடி போனா, குடிக்க ஒரு வாய் தண்ணீர் கூட தர மாட்டாங்க...' என, புலம்ப, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.
