தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'ஜாக்பாட் அடிச்சது அவங்க தான்!'

 'ஜாக்பாட் அடிச்சது அவங்க தான்!'

 'ஜாக்பாட் அடிச்சது அவங்க தான்!'


PUBLISHED ON : ஏப் 03, 2026 03:12 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 03, 2026 03:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை திருவொற்றியூரில், அ.தி.மு.க., வேட்பாளர் குப்பனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி சமீபத்தில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'தி.மு.க., கூட்டணி அடிமை கூட்டணி. 20 நாட்களாக கூட்டணி கட்சிகளை தினமும் அழைத்து பேசி, 10 ஆண்டுகள் ஆதரவு கொடுத்தவர்களுக்கு, ஸ்டாலின் வேட்டு வைத்து விட்டார். தி.மு.க., ஆட்சியை தாங்கிப் பிடித்த கட்சிகளுக்கு எல்லாம், கடந்த தேர்தலை விட ஒரு சீட்டை குறைத்து விட்டார்.

'ஆனால், அங்கு புதிதாக ஒரு கட்சி சேர்ந்தது. 'விலை போகாதவரை அதிக விலைக்கு வாங்கிட்டாங்க' என, 'யு டியூப்'பில் ஒருத்தர் அழகாக பேசினார். அதுபோல, நம் பெயரை சொல்லி எவ்வளவு, 'சீட்' ஏற்றினர் என்று உங்களுக்கே தெரியும். இது தான் தி.மு.க.,வின் உண்மை முகம் என்பதை, கூட்டணிக் கட்சிகள் உணர வேண்டும்' என்றார்.

இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'தே.மு.தி.க.,வை தானே சொல்றாரு...' என கேட்க, சக தொண்டர், 'ஆமா... இந்த தேர்தல்ல ஜாக்பாட் அடிச்சது அவங்க தான் பா...' என, பதிலளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us