PUBLISHED ON : அக் 21, 2024 12:00 AM

துாத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், 'தி.மு.க., ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு சரியில்லை. கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக பிரதமர் மோடி பாராட்டிய ஆட்சி, பழனிசாமி ஆட்சி. 2026 தேர்தல், அ.தி.மு.க.,விற்கு சாதகமாகவும், தி.மு.க.,விற்கு பாதகமாகவும் இருக்கும்.
'சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை திருப்பி தாக்கும் ஏவுகணையே, அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் தான். உதயநிதி மட்டுமல்ல, இன்பநிதி வந்தாலும் ஏற்றுக் கொள்ள கூடிய நிலையில் இருப்பதாக மூத்த அமைச்சர்கள் புலம்பும் நிலை அங்கு உள்ளது' என்றார்.
அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர், 'பிரிஞ்சிருக்கும் எல்லாரும் ஒண்ணு சேர்ந்தா தான், வெற்றியை பற்றி நினைக்க முடியும்... முதலில் அதை பற்றி யோசிங்க...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

