PUBLISHED ON : ஜூன் 12, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தன் பிறந்த நாளையொட்டி சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டியில், 'தமிழக அரசு திசைமாறி போய்க் கொண்டிருக்கிறது. மதுரையில் நடந்த தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர்களை கோமாளிகள் என்று பேசியுள்ளனர். ஜனநாயக நாட்டில், அனைத்து தலைவர்களுக்கும் அரசியல் செய்ய உரிமை இருக்கிறது.
'ஆட்சியில் இருக்கும் ஆணவத்தில், மற்றவர்களை கோமாளி என்று எப்படி சொல்லலாம்? கோமாளிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நீங்கள்தான், 2026ல் ஏமாளிகளாக போகிறீர்கள்...' என்றார்.
பா.ஜ., தொண்டர் ஒருவர், 'நம்ம அக்கா எதுகை, மோனையில வெளுத்து வாங்குறாங்களே...' எனக்கூற, சக தொண்டரோ, 'தி.மு.க.,வுக்கு இப்படித்தான் பதிலடி தரணும்...' என்றபடியே நடந்தார்.