தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இவங்க கட்சிக்கு இவர் தான்!'

'இவங்க கட்சிக்கு இவர் தான்!'

'இவங்க கட்சிக்கு இவர் தான்!'


PUBLISHED ON : நவ 18, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் தரிசனம் செய்த, பா.ஜ., மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர், ஹெச்.ராஜா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், 'பா.ஜ., 2026 சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும்' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ராஜா, 'நான், 35 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். இதுவரை கூட்டணி பற்றி பேசியது கிடையாது. எங்கள் தலைமை தான் கூட்டணி குறித்து முடிவு செய்யும். ஆனால், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், என்ன பேசுகிறார் என அவருக்கே தெரியவில்லை. அவர் பேசுகிற பேச்சை பார்த்தால், தனக்கு, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை; ஒட்டும், உறவும் இல்லை என, பேசி விடுவரோ என, எனக்கு பயமாக இருக்கிறது. ஜெயகுமார் பேச தெரியாமல், ஏதேதோ உளறுகிறார்' என்றார்.

இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'சர்ச்சைக்கும், தடாலடிக்கும் பெயர் போனவங்க எல்லா கட்சிகளிலும் இருக்காங்க...' என, முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'இவங்க கட்சிக்கு இவர் தான்...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us