PUBLISHED ON : மே 23, 2026 12:00 AM

மதுரையில், தி.மு.க., வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், முன்னாள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது.
இதில் மூர்த்தி பேசுகையில், 'நான் போட்டியிட்ட மதுரை கிழக்கு தொகுதியில், எந்த குறைகளும் இல்லாமல் தன்னிறைவு பெற்ற தொகுதியாக வைத்திருந்தேன். அதனால் தான், என் தொகுதி பற்றி கவலைப்படாமல் மேற்கு, மேலுார், சோழவந்தான் தொகுதி வெற்றிக்காக கவனம் செலுத்தினேன்.
'குறிப்பாக, பொதுத் தொகுதியான மேலுாரில், காங்.,கின் ஆதிதிராவிடர் வேட்பாளர் விஸ்வநாதனை கடைசி நேரத்தில் அறிவித்தாலும், அவரை வெற்றி பெற வைத்தோம். ஆனால், காங்கிரசில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் திரும்பி பார்ப்பதற்குள் த.வெ.க.,வுக்கு ஆதரவு அளிக்க சென்று விட்டனர்' என்றார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'அமைச்சரா இருந்த இவர் தோத்துட்டாரு... இவரால ஜெயிச்ச விஸ்வநாதன், த.வெ.க., கூட்டணி அரசில் அமைச்சராகிட்டாரு... இதுதான் நேரம்கிறது...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.
