தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'வேலை கொடுக்கிறவங்களா மாறணும்!'

 'வேலை கொடுக்கிறவங்களா மாறணும்!'

 'வேலை கொடுக்கிறவங்களா மாறணும்!'


PUBLISHED ON : ஜூலை 22, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசு பொதுத் தேர்வுகளான, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் சிறப்பிடம் பிடித்த, திருப்பூர் மாநகராட்சி பகுதி மாணவ - மாணவியருக்கு, சமீபத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், மொத்தம், 3.93 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

விழாவில், சங்கத்தின் கவுரவத் தலைவர் சக்திவேல் பேசுகையில், 'திருப்பூர் மாணவ - மாணவியர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். பொதுவாக படித்தவர்கள், கலெக்டர், டாக்டர், வக்கீல் ஆகலாம். ஆனால், திருப்பூரைச் சேர்ந்தவர்கள் ஏற்றுமதியாளர்கள் ஆகலாம்.

'திருப்பூரில் இருந்து ஆண்டுதோறும், 45,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறோம். நீங்களும், வருங்காலத்தில் ஏற்றுமதியாளராக வரலாம்; அதற்கு தேவையான உதவிகளை எங்கள் சங்கம் செய்து கொடுக்கும்' என்றார்.

இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'படிச்சு முடிச்சு வேலைக்குப் போறதை விட, பலருக்கு வேலை கொடுக்கிறவங்களா நம்ம மாணவர்கள் மாறணும்' எனக் கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us