PUBLISHED ON : மே 13, 2025 12:00 AM

தி.மு.க., அரசை கண்டித்து, சேலம் மாவட்டம், ஆத்துாரில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசும்போது, 'அ.தி.மு.க., கூட்டத்தில் பேசிய பேச்சாளர் மீது, புகார் இல்லாமல் போலீசாரே வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசாரை, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விட மாட்டோம்.
'இன்னும் எட்டு மாதங்கள் தான் உள்ளன. எட்டு மாதத்திற்கு பிறகு, அந்த போலீசார் தமிழகத்தில் எங்கு வேலை செய்தாலும் விட மாட்டோம். உங்களிடம் வேலை செய்யும் போலீசார், நாளை எங்களிடம் வருவர்...' என, ஆவேசமாக பேசினார்.
பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ்காரர் ஒருவர், 'இவங்க ஆட்சிக்கு வந்தா, தி.மு.க.,வினரும் இதே மாதிரி தான் நம்மை திட்டுவாங்க... நமக்கு ரெண்டு பக்கமும் இடி தான் பா...' என, சலித்துக்கொள்ள, சக போலீசார் ஆமோதித்தனர்.