PUBLISHED ON : பிப் 07, 2025 12:00 AM

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த நாமகிரிபேட்டையில், அ.தி.மு.க., சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது, போதையில் இருந்த ஒரு தொண்டர் திடீரென மேடையில் ஏறி, 'வரும் தேர்தலில் நாம் விஜயுடன் கூட்டணி சேர்ந்து, மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும்...' என, உரத்த குரலில் கத்தினார். மற்ற தொண்டர்களும், அவருக்கு ஆதரவாக கோஷமிட்டு, 'அவர் சொல்வதுதான் சரி...' என்றனர்.
இதை வேடிக்கை மட்டுமே பார்த்த தங்கமணி, முகத்தில் எந்த ரியாக் ஷனும் காட்டவில்லை. இதையடுத்து, நிர்வாகிகள் சிலர் மேடை ஏறி, அவசர அவசரமாக போதை தொண்டரை அப்புறப்படுத்தினர்.
மூத்த நிருபர் ஒருவர், 'இவங்களுக்கு இருக்கிற ஒரே வழி விஜய்தான்... அதுக்காக, இப்பவே தொண்டர்களை தயார்படுத்துறாங்களோ...?' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

