PUBLISHED ON : மே 18, 2026 12:08 AM

காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி., சார்பில், கோவையில் சமீபத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கடலுார் காங்., - எம்.பி., விஷ்ணுபிரசாத், முதல்வர் விஜயை ஏகத்துக்கும் பாராட்டி பேசினார்.
'எங்கள் முதல்வர் தளபதி விஜய் அவர்கள்' என, அடிக்கடி புகழாரம் சூட்டியதை பார்த்து காங்., நிர்வாகிகளே வியப்படைந்தனர்.
காங்., நிர்வாகி ஒருவர், '10 நாளைக்கு முன்னாடி வரை, 'முதல்வர் தளபதி அவர்களே'ன்னு ஸ்டாலினை புகழ்ந்தாரு... இப்ப, அதே பட்டத்தை போட்டு, விஜயை புகழ்ந்து தள்ளுறாரே...' என முணுமுணுத்தார்.
இதை கேட்ட சக நிர்வாகி, 'தளபதிங்கிற பட்டம் ஒண்ணுதான்; ஆனா, ஆள்தான் வேற... இப்படி எல்லாரையும் தளபதி தளபதின்னு புகழ்ந்துட்டு, நாமதான் கடைசி வரைக்கும் சிப்பாய்களாவே இருக்கோம்...' என புலம்ப, சக நிர்வாகிகள் ஆமோதித்து சிரித்தனர்.
