தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'அடுத்த ஆளுங்கட்சி நாமதான்!'

 'அடுத்த ஆளுங்கட்சி நாமதான்!'

 'அடுத்த ஆளுங்கட்சி நாமதான்!'


PUBLISHED ON : மே 01, 2026 12:12 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 01, 2026 12:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேலுார் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் வேல்முருகன், சமீபத்தில் எஸ்.பி., அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார்.

பின், அவர் கூறுகையில், 'அணைக்கட்டு தொகுதி த.வெ.க., வேட்பாளர் என்ற முறையில், ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு நான் சென்று பார்த்து வருகிறேன். ஆனால், தி.மு.க.,வினர் முறையான அடையாள அட்டையின்றி அடிக்கடி உள்ளே சென்று பார்வையிடுகின்றனர்.

'அவர்கள், ஓட்டு எண்ணும் நாளில் அசம்பாவிதங்களை ஏற்படுத்த திட்டமிடுவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எனவே, இதை தடுக்கும் வகையில், ஓட்டு எண்ணிக்கை வளாகம், பொதுமக்கள், த.வெ.க., தொண்டர்களை பாதுகாக்கும் வகையில், கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி, எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளேன்' என்றார்.

அவருடன் இருந்த தொண்டர் ஒருவர், 'நம்ம போலீசார், ஆளுங்கட்சியினருக்கு தான் பாதுகாப்பு தருவாங்க...' என முணுமுணுக்க, 'அட, அடுத்த ஆளுங்கட்சி நாமதான் பா...' என, சக தொண்டர் கூற, அங்கு சிரிப்பலை எழுந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us