PUBLISHED ON : ஜன 20, 2026 02:38 AM

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்த கருத்து கேட்பு கூட்டம், வேலுார், ரங்காபுரத்தில் நடந்தது. இதில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்று வணிகர்கள், விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.
கூட்டம் நடந்த போது, அரங்கத்தில் அ.தி.மு.க.,வினர் சத்தமாக பேசியபடி இருந்தனர். இதனால், ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, 'பள்ளிக்கூடத்தில் அமைதியாக இருப்பது போல இருங்கள்; யாரும் உள்ளே இருந்து பேசக்கூடாது' என கண்டித்தார்.
இதை கேட்ட நிர்வாகி ஒருவர், 'ஏற்கனவே நாலரை வருஷமா, தி.மு.க., அரசுக்கு எதிரா, வேலுார் மண்டலத்தில், அ.தி.மு.க.,வினர் எந்த போராட்டமும் நடத்தாம பள்ளிக்கூட மாணவர்கள் போல அமைதியாகத் தானே இருந்தோம்; இப்பவும் இருந்துடுறோம்...' என, விரக்தியுடன் கூறியபடியே அங்கிருந்து கிளம்பினார்.

