PUBLISHED ON : பிப் 16, 2025 12:00 AM

'திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான அமைதி பேச்சில், அனைத்து கட்சியினரும் கையெழுத்திட்டனர். அ.தி.மு.க., பிரதிநிதி மட்டும் கையெழுத்திடாமல் சென்று விட்டார்' என, மதுரை கலெக்டர் சங்கீதா அறிக்கை வெளியிட்டார்.
ஆனால், 'அந்த கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவே இல்லை. கலெக்டர் தன் அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் வழக்கு தொடரப்படும்' என, திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா எச்சரித்தார்.
கலெக்டருக்கு நெருக்கடி ஏற்பட்டதால், அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகள், திருப்பரங்குன்றம் பகுதி அ.தி.மு.க.,வினரிடம் சென்று, 'யாராவது ஒருவர் அமைதி பேச்சில் பங்கேற்றது போல் கையெழுத்து போடுங்களேன்' என, மன்றாடினர்.
அ.தி.மு.க.,வினரோ, 'எங்க கட்சி ராணுவ கட்டுப்பாடு கொண்டது... அதெல்லாம் முடியாது' எனக் கூறி, மறுத்து விட்டனர். இதனால் அதிகாரிகள், 'வாயை கொடுத்து வம்புல மாட்டிக்கிட்டோமே...' என, புலம்பியவாறு நடையை கட்டினர்.

