PUBLISHED ON : செப் 10, 2026 01:49 AM

பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம், சிறப்பு கண்காணிப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரி செந்தில்ராஜ் தலைமையில், சமீபத்தில் சென்னை அடையாறில் நடந்தது; பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், 'மழைக்கான தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நிர்வாக ரீதியான சிக்கல், அவசரமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து வெளிப்படையாக பேசுங்கள். அப்போது தான், கமிஷனர், தலைமை செயலர் கவனத்திற்கு கொண்டு சென்று, தேவையான நடவடிக்கை எடுக்க முடியும். சக நண்பரிடம் பேசுவதை போல் கூறுங்கள்; யார் பெயரையும் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை' என, ஐ.ஏ.எஸ்., அதிகாரி செந்தில்ராஜ் கூறினார்.
கூட்டத்தில் பங்கேற்ற ஒரு அதிகாரி, 'ஒத்துழைக்காத இதர துறை அதிகாரிகள் மீது தான் குற்றச்சாட்டுகள் கூற முடியும். பிறகு அவர்கள் நம்மை பழிவாங்குவர். நமக்கு எதற்கு வம்பு; அமைதியாக இருப்போம்' என்றார். அருகில் இருந்த மற்றொரு அதிகாரி ஆமோதித் து தலையசைத்தார்.
