PUBLISHED ON : டிச 07, 2024 12:00 AM

பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி, 110வது வார்டில் அடங்கிய புஷ்பா நகர் குடியிருப்புக்குள் மழை வெள்ளம் புகுந்தது. பொதுமக்கள் அலறியடித்து, வார்டு கவுன்சிலரும், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., செயலருமான சிற்றரசுவை தேடினர்.
கவுன்சிலர், மாவட்ட செயலர் ஆபீஸ்களில் சிற்றரசுவை பார்க்க முடியவில்லை. புகார் கொடுக்க சென்ற பொதுமக்கள், சிற்றரசுவின் வீட்டிற்கு படையெடுத்தனர்;அங்கும் அவர் இல்லை.
இதனால் ஏமாற்றமடைந்த ஒருவர், 'துணை முதல்வர்உதயநிதியின் ஆதரவாளர் என்பதால், மழை சேதங்களைபார்வையிடும் அவருடன், சிற்றரசு சென்றிருப்பார்' என்றார்.
உடனே இளைஞர் ஒருவர், 'மக்களுக்கு பணி செய்ய முன்வராதவர், எதற்கு கவுன்சிலர் பதவியில் இருக்கணும்... ராஜினாமா பண்ணிட்டு, துணை முதல்வருடன் சுற்ற வேண்டியது தானே' என, திட்டியபடியே அங்கிருந்து நகர்ந்தார்.