PUBLISHED ON : டிச 21, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை மாநகராட்சி, மணலி மண்டல குழு கூட்டம்,தி.மு.க.,வைச் சேர்ந்த மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நடந்தது. இதில், பங்கேற்ற கவுன்சிலர்கள், தங்கள் வார்டு பிரச்னைகளை அடுக்கினர்.
அப்போது, 21வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜேஷ் சேகர் பேசுகையில், 'வார்டு சபை கூட்டங்களுக்கு, எந்த அதிகாரியும் வருவதில்லை. சம்பிரதாயத்திற்கு கூட்டம் நடத்துவது போல் உள்ளது' என்றார்.
ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருவர், 'மண்டல கூட்டத்திற்கே அதிகாரிகள் சரியாக வருவதில்லை. இவர், வார்டு கூட்டத்திற்கு வரலைன்னு சொல்றாரே...'என முணுமுணுக்க, அருகில் இருந்த மற்றொரு கவுன்சிலர், 'எதிர்க்கட்சி கவுன்சிலர் கேட்பதிலும் நியாயம் இருக்கே... அதிகாரிகள் நம்மை எங்க மதிக்கிறாங்க...' என, புலம்பியவாறு நடையை கட்டினார்.