PUBLISHED ON : ஜன 21, 2025 12:00 AM

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா மதுரையில் நடந்தது.
இதில் பங்கேற்ற, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேட்டி அளிக்கையில், 'தி.மு.க., ஆட்சியில், அதிகாரிகள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதற்கு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு சாட்சி. மக்கள், வறுமையிலும் வறட்சியிலும் இருந்தபோது, 'மானாட மயிலாட' நிகழ்ச்சி பார்த்து ரசித்தார், அப்போதைய முதல்வர் கருணாநிதி.
'அவரது தவப்புதல்வரும், முதல்வருமான ஸ்டாலின், ஊர் ஊராகச் சென்று, சைக்கிள் ஓட்டி விளம்பரம் செய்தார். இவர் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியபோது, உலகத்திலிருந்து வந்த அறிஞர்கள் எல்லாம், கீழே அமர வைக்கப்பட்டனர். இவரது குடும்பத்தினர் மட்டும், மேடையில் அமர வைக்கப்பட்டனர். அனுபவி ராஜா அனுபவி... இன்னும் ஒரு வருஷம் தான்; அதற்கடுத்து மக்கள் இவர்களை, எங்கே வைப்பர் என்று தெரியாது' என்றார்.
'அடுத்த ஆண்டு என்ன நடக்கப் போகுதுன்னு, நல்லா தான் ஆரூடம் சொல்றாரு... நமக்கும் இலவசமாய் ஆரூடம் சொல்வாரோ ராஜு...' என, நிருபர் ஒருவர் கிண்டலடித்தார்.

