PUBLISHED ON : ஜூன் 24, 2025 12:00 AM

மதுரையில், வி.சி., கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று, அதன் தலைவர் திருமாவளவன் பேசுகையில், 'ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ளோம். ஆனாலும், நம் கட்சி கொடியை அகற்றுகின்றனர். பிரச்னையை எதிர்கொண்டு போராடி தான் கூட்டணியில் நீடிக்கிறோம். ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு நீடிக்க வேண்டும் என கேட்பது சராசரி மனிதனின் சிந்தனை. அரசியல் என்றால் தெளிவு, பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை அவசியம்.
'நமக்கு ஆதரவான சக்திகள் யார், எதிரான சக்திகள் யார் என்ற புரிதல் வேண்டும். அதனால் தான் பா.ஜ., - பா.ம.க., கட்சிகள் இடம்பெற்ற கூட்டணியில் சேர மாட்டோம். அதற்காக, அ.தி.மு.க., அணியில் சேரலாம்; பிரச்னை இல்லை. ஆனால், அங்கு பா.ஜ., கூட்டணியில் உள்ளதே...' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'வேற வழியில்லாம தான் தி.மு.க., அணியில் நீடிக்கிறோம்னு ஒப்புதல் வாக்குமூலம் தர்றாரோ...' எனக் கூற, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.