/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'ஆதாயமின்றி ஆத்துல இறங்குவாங்களா?'
/
'ஆதாயமின்றி ஆத்துல இறங்குவாங்களா?'
PUBLISHED ON : மே 15, 2025 12:00 AM

சென்னை, திருவொற்றியூரின் பல முக்கிய சந்திப்பு களில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியினர் போட்டி போட்டு, தண்ணீர் பந்தல்களை திறந்து வருகின்றனர்.
உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், தங்கள் கெத்தை காட்டுவதற்காக, பல ஆயிரம் ரூபாயை செலவழித்து, பிரமாண்ட தண்ணீர் பந்தல்களை திறந்து, டன் கணக்கில் பழங்கள் மற்றும் இளநீர்களை வாங்கி, பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இதைப் பார்த்த முதியவர் ஒருவர், 'எந்த வருஷமும் இல்லாம, இந்த வருஷம் தண்ணீர் பந்தல்கள் திறப்பதில் ஏன் இவ்வளவு ஆர்வமா இருக்காங்க...' எனக் கேட்டார்.
அருகில் இருந்த வாலிபர், 'தேர்தல் கமிஷன் விதிப்படி, அடுத்த வருஷம் தேர்தலப்ப தண்ணீர் பந்தல்கள் திறக்க முடியாது... அதான், இப்பவே திறந்து, மக்கள் ஆதரவை திரட்டுறாங்க...' என, விளக்கம் அளிக்க, முதியவர், 'அது சரி... ஆதாயமில்லாம யாராவது ஆத்துல இறங்குவாங்களா...' என, முணுமுணுத்தபடியே நடந்தார்.