PUBLISHED ON : ஜன 02, 2024 12:00 AM

இந்திய கம்யூ., கட்சியின், 99ம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் கட்சி தொண்டர்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
சிவப்பு ஆடையுடன் வந்த கட்சியினர், திருப்பூர் குமரன் சிலை அருகே கூடி, பேரணி செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது, காவி நிற வேட்டி, துண்டு அணிந்து, திருவோடுடன் வந்த துறவி ஒருவர், கம்யூ., கட்சியினரை பார்த்து, 'நீங்க எவ்வளவு தான் பேரணி நடத்தினாலும், மூன்றாவது முறையா, மோடி தான் மீண்டும் பிரதமர் ஆவார்' என்று உரக்க கூறி, அங்கிருந்து நகர்ந்தார்.
உடனே, 'இந்தாளை துரத்தி விடுங்க...' என, சில கம்யூ., தொண்டர்கள் கோபமடைந்து ஆவேசமாக பேசினர்.
பார்வையாளர் ஒருவர், 'துறவியை விரட்டி விட்டுட்டா மட்டும் இவங்க பேரணி நடத்தி, ராகுலை பிரதமர் ஆக்கிடுவாங்களா...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.

