/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'நிதியை தடுத்து நிறுத்திடுவாங்களோ?'
/
'நிதியை தடுத்து நிறுத்திடுவாங்களோ?'
PUBLISHED ON : ஏப் 17, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார், மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்த வகை செய்யப்படும் என்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதி, இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. இதன் மூலம், மக்கள் நம்பிக்கையை தமிழக ஆட்சியாளர்கள் இழந்துள்ளனர். 100 நாள் வேலை திட்ட நிதியை பெற, 39 எம்.பி.,க்களும் பார்லி.,யில் போராடாமல் தமிழகத்தில் போராடுகின்றனர்.
'கடலில் பேனா சிலை வைக்க நிதி ஒதுக்கும் ஸ்டாலின் அரசு, 100 நாள் வேலை திட்டத்திற்கு அந்த நிதியை வழங்கலாமே...' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'பா.ஜ.,வுடன் கூட்டணி வச்சுட்டதால, அவங்க நிதி தந்தாலும், நாங்க தடுத்து நிறுத்திடுவோம்னு சொல்லாம சொல்றாரோ...?' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.