PUBLISHED ON : மார் 05, 2026 02:59 AM

மறைந்த தொழிற்சங்க தலைவர் சிங்கார வேலரின், 166வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சென்னை, திருவொற்றியூரில், பா.ஜ., மீனவர் அணி சார்பில் நடந்தது. இதில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசினார்.
அப்போது, கூட்டத்தை விலக்கிக் கொண்டு மேடையில் ஏறிய, பா.ஜ., பெண் நிர்வாகி முத்துலட்சுமி என்ப வர், பிரதமர் நரேந்திர மோடி படம் பதிக்கப்பட்ட, 8 சவரன் தங்க செயினை, நயினார் நாகேந்திரனிடம் கொடுத்து, தனக்கு அணிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பிரமாண்ட தங்க செயினை பார்த்த நயினார் நாகேந்திரன், மிரண்டு விட்டார். பின், அந்த பெண்மணிக்கு செயினை அணிவித்து விட்டார்.
கீழே இருந்த தொண்டர் ஒருவர், 'செயினை தலை வருக்கு தான் அணிவிக்க போறாங்கன்னு நினைச்சேன்... நம்ம அக்கா விவரமானவங்க தான்...' என முணுமுணுக்க, சக தொண்டர், 'தங்கம் விக்கிற விலையில, 8 சவரன் செயினை யாராவது தானமா தருவாங்களா...?' என்றபடியே நடையை கட்டினார்.

