PUBLISHED ON : பிப் 02, 2026 01:54 AM

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தன் ஆதரவாளர்களுடன், தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் பேசுகையில், 'இன்றைக்கு திராவிடத்தை கண்டால், சிலர் மனவேதனை அடைகின்றனர். யாரும் இந்த திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது. நமது முதல்வர் எதற்கும் துணிந்து, தன்னுடைய உயிர் திராவிடம் தான் என வாழ்ந்து வருகிறார். சிபி சக்கரவர்த்தி மடியில் விழுந்த புறா போல், நானும் முதல்வர் மடியில் விழுந்து விட்டேன்' என்றார்.
இதை கேட்ட, தி.மு.க., தொண்டர் ஒருவர், 'இந்த புறாவையாவது சுதந்திரமா பறக்க விடுவாங்களா... அல்லது நம்ம கட்சியின், 'டெல்டா' மாவட்ட தளபதிகளின் கூண்டுக்குள்ளேயே அடைச்சிடுவாங்களான்னு தெரியலையே...' என, முணுமுணுக்க, சக தொண்டர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.

