PUBLISHED ON : அக் 05, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரவி ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினாலும், இடையில் அவர் தமிழில் பேசியபோது, கரகோஷம் அதிகமானது.
'இனிய வணக்கம்...' என பேச்சை துவக்கி, 'எண்ணிய எண்ணியாங்கு...' என்ற குறளை, அழகு தமிழில் சொல்லி, அதற்கான விளக்கத்தை ஆங்கிலத்தில்அளித்தார்.
'பிரதமர் மோடி, 'நாரி சக்தி' குறித்து சொல்கிறார். பெண் தலைவர்கள் உருவாகாமல், நாடு முன்னேறாது. ஆண்களிடம் இல்லாத சில நல்ல குணங்கள், சக்தி பெண்களிடம் உள்ளன. உடனே, ஆண்கள் தவறாக நினைக்க வேண்டாம்' என்று விளக்கிய போது மாணவர்கள், பெற்றோர் கைதட்டி ரசித்தனர்.
பெற்றோர் சிலர், 'என்ன தான் ஆங்கிலத்தில் படித்து பட்டம் பெற்றாலும், அழகு தமிழிலும் கவர்னர் அசத்துறாரே...' என கூறி நெகிழ்ந்தவாறு நடந்தனர்.