PUBLISHED ON : ஜூலை 21, 2025 12:00 AM

சென்னை, ஆவடி பேருந்து நிலையத்தை, 36 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணியை, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.
பின், நிருபர்களிடம் அமைச்சர் நாசர் கூறுகையில், '2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஆவடியில், 'டைடல் பார்க்' கொண்டு வருவோம்; கிடப்பில் கிடக்கும் பட்டாபிராம் மேம்பாலத்தை திறப்போம்; ஆவடி அரசு மருத்துவமனையை புதுப்பிப்போம் என கூறினோம். சொன்னது போல அனைத்தையும் செய்து விட்டோம்...' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இவர் சொல்றது எல்லாமே, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்தவை... அதை இவங்க ஆட்சியில் முடிச்சுட்டு, பெருமை வேற அடிச்சுக்கிறாரே...' என, 'கமென்ட்' அடித்தார்.
சக நிருபர், 'ஓ... அதனால தான், இது, 'ஸ்டிக்கர்' ஆட்சின்னு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அடிக்கடி விமர்சனம் பண்றாரா...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.