PUBLISHED ON : பிப் 06, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : பனமரத்துப்பட்டி ஒன்றியம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பஞ்சாயத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், அதிகாரிகள், கிராம மக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
அப்போது பேசிய பஞ்சாயத்து ஊழியர் ஒருவர், 'இந்த பஞ்சாயத்தில், தலைவர் பதவி வகித்த போது தெற்கு பார்த்தபடி பந்தல் அமைத்து, கிராமசபை கூட்டம் நடத்தினோம். கூட்டம் முழுதும் ஒரே சண்டையாக இருந்தது. தற்போது, தலைவர் பதவிக்காலம் முடிந்ததால், வாஸ்துப்படி வடக்கு பார்த்து பந்தல் போட்டிருக்கிறோம்' என்றார்.
இதைக் கேட்ட ஒருவர், 'மக்கள் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காத வரை, எந்த திசையில் பார்த்து பந்தல் போட்டாலும் சண்டையா தான் இருக்கும்... வாஸ்து, சாஸ்துன்னு எல்லாம் பேசி தப்பிக்க முடியாது...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.