PUBLISHED ON : பிப் 04, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரையில், அ.தி.மு.க., சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகள் தின பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பங்கேற்றார்.
அப்போது பேசுகையில், 'தி.மு.க., கூட்டணி கட்சியினர் கொத்தடிமைகளாக உள்ளனர். தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி மகன் வீட்டில் பட்டியலின பணிப்பெண்ணுக்கு நடந்த கொடுமை குறித்து திருமாவளவன் ஏதாவது பேசினாரா?
'காங்., குறித்து தி.மு.க., பொது செயலர் துரைமுருகன் கேவலமாக பேசியிருக்கிறார். சோத்துல உப்பு போட்டு சாப்பிடுறவன், காங்., கட்சியில் இருக்க மாட்டான்' என்றார்.
அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'இவர் தி.மு.க., கூட்டணி கட்சிகளை உசுப்பேத்தி, நம்ம பக்கம் இழுப்பார்னு பார்த்தால், இப்படி வெட்டி விடுற மாதிரி பேசுறாரே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.