PUBLISHED ON : ஜன 31, 2024 12:00 AM

அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்ட மாணவரணி செயலர் தமிழ்மணி தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மல்லுாரில் நடந்தது.அக்கட்சி பேச்சாளர் முருகேசன் பேசுகையில், 'வாழும் எம்.ஜி.ஆர்., எடப்பாடியார், சேலத்து சிங்கம் இளங்கோவன், வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து பத்தரை மாத்து சொக்கத்தங்கம்' என, முக்கிய
நிர்வாகிகளை புகழ்ந்தார்.அப்போது மேடையில் இருந்த ஆத்துார் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், பக்கத்தில்
இருந்த வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து கையை பிடித்து சுரண்டி பார்த்தார். இதை கவனித்த மேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.கட்சி நிர்வாகி ஒருவர், 'தங்கம்னு சொன்னதுக்கு உரசுறார்... நல்ல வேளையா நெருப்புனு சொல்லாம
விட்டாரே...' என, 'கமென்ட்' அடித்ததும், அருகில் இருந்தவர்கள் அவரை முறைத்து பார்த்தபடி நகர்ந்தனர்.
**********************