PUBLISHED ON : ஜன 29, 2025 12:00 AM

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நுாற்றாண்டு நிறைவு விழா, மதுரையில் நடந்தது.
இதில் பங்கேற்று, முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'வர்த்தகர்களுக்காக, இந்த அரசு எப்போதும் துணை நிற்கும். அதுபோல வர்த்தகர்கள் ஆதரவு எங்களுக்கு முக்கியம். என்னை பொறுத்தவரை, வர்த்தகர்களாகிய உங்களுக்கு மீண்டும் ஏதாவது கோரிக்கை உள்ளதா என்ற சந்தேகம் இருக்கிறது.
'வியாபாரத்தை அதிகப்படுத்துவதற்கு வியாபாரிகள் எப்படி பேசி பேசி சாமர்த்தியமாக வியாபாரம் செய்வரோ, அதேபோல அரசிடமும் சாமர்த்தியமாக பேசி செய்ய வைத்து, சாதிக்கக்கூடிய ஆற்றல், இங்கே இருக்கக்கூடிய வர்த்தகர் சங்க நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் இருக்கிறது' என்றார்.
இதைக் கேட்ட வர்த்தகர் ஒருவர், 'நமக்கு தொழில் பண்ற சாமர்த்தியம் இருக்கோ, இல்லையோ... முதல்வருக்கு பேச்சு சாமர்த்தியம் நல்லாவே இருக்கு...' என, முணுமுணுத்தபடியே நடந்தார்.

