sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'பட்டம் சூட்ட வேண்டியது தானே!'

/

'பட்டம் சூட்ட வேண்டியது தானே!'

'பட்டம் சூட்ட வேண்டியது தானே!'

'பட்டம் சூட்ட வேண்டியது தானே!'

1


PUBLISHED ON : ஜன 20, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 20, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை கண்டித்து, பா.ம.க., தலைவர் அன்புமணி மனைவி சவுமியா தலைமையில், சென்னையில் போராட்டம் நடந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

அவரது கைதை கண்டித்து, சேலம் கிழக்கு மாவட்ட, பா.ம.க., சார்பில், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, 'அண்ணியை விடுதலை செய்ய வேண்டும்' என, கோஷம் எழுப்பினர்.

இதை கேட்ட பார்வையாளர் ஒருவர், 'அம்மா, அண்ணி அடைமொழியை தான் ஜெயலலிதா, பிரேமலதா எடுத்துக்கிட்டாங்களே... இவங்களுக்கு புதுசா எதையும் தேடாமல், அண்ணின்னு சொன்னா குழப்பம் வராதா...' என, முணுமுணுக்க, மற்றொருவர், 'அவங்க தான், பசுமை தாயகம் என்ற அமைப்போட தலைவராச்சே... சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதால், 'பசுமை நாயகி'ன்னு ஒரு பட்டத்தை சூட்ட வேண்டியது தானே...' என, 'கமென்ட்' அடித்து, சிரித்தவாறு நடந்தார்.






      Dinamalar
      Follow us