தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இப்பவே பிரசாரத்தை துவங்கிட்டாரே!'

'இப்பவே பிரசாரத்தை துவங்கிட்டாரே!'

'இப்பவே பிரசாரத்தை துவங்கிட்டாரே!'


PUBLISHED ON : மே 14, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 14, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி, வேம்பி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக, தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா பங்கேற்றார்.

அவர் பேசும்போது, 'தொகுதியில் உள்ள 33 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கவும், கிராம சாலைகள், ஆரம்ப சுகாதார நிலைய மேம்பாடு திட்டங்களை கொண்டு வரவும், முதல்வரிடம் ஒப்புதல் பெற்றுள்ளேன்.

'எம்.எல்.ஏ., என்ற அடிப்படையில் முக்கிய பிரச்னைகள் பற்றி முதல்வரிடம் மனுக்கள் அளித்து, பல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். பொது பிரச்னைகள் குறித்து, 'வாட்ஸாப்'பில் தெரிவித்தால் கூட நடவடிக்கை எடுத்து வருகிறேன். என் தொகுதி மக்கள் தான் எனக்கு எஜமானர்கள்; நான், அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் சேவகன். என்னை சிறந்த முறையில் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்...' என்றார்.

இதை கேட்ட ஒருவர், 'வர்ற தேர்தலிலும் என்னை நீங்க ஆதரிக்கணும்னு, மறைமுகமா இப்பவே பிரசாரத்தை ஆரம்பிச்சுட்டாரே...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us