sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'அழகா 'மிக்ஸ்' பண்ணிட்டாரே!'

 'அழகா 'மிக்ஸ்' பண்ணிட்டாரே!'

 'அழகா 'மிக்ஸ்' பண்ணிட்டாரே!'


PUBLISHED ON : பிப் 21, 2026 02:56 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 21, 2026 02:56 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை, காளவாசல் பகுதியில், சாலை அமைக்கும்பணிக்கு நடந்த பூமி பூஜையில், மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான செல்லுார் ராஜு பங்கேற்றார்.

அவரிடம், 'தமிழகத்தில் போதை கலாசாரம் தொடர்கிறதே' என நிருபர்கள் கேட்டதற்கு, 'போதையால், சிறுமி முதல் பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். ஒரு படத்தில், ஆர்.ஜே.பாலாஜி சொல்வாரு,.. 'உடம்பு பூரா வியாதின்னு' என்றவர், திடீரென பேச்சை நிறுத்தி, 'ஓ, அவரு தாடி பாலாஜியா' என்றபடியே தொடர்ந்தார்...

'தாடி பாலாஜியிடம் விவேக், எல்லாத்துக்கும் ஒரே மருந்து இருக்கு. அதை குடிச்சா உன் பிரச்னை தீர்ந்திடும்'னு சொல்வாரு. அதுபோல், தி.மு.க., ஆட்சியில இருக்கிற எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு, ஆட்சி மாற்றம்தான்' என்றார்.

இதை கேட்ட அக்கட்சி தொண்டர் ஒருவர், 'காமெடி காட்சியை, நடப்பு அரசியலோடு அண்ணன் அழகா மிக்ஸ் பண்ணிட்டாரே... கில்லாடி தான்பா...' எனக் கூற, சக தொண்டர்கள் சிரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us