PUBLISHED ON : செப் 01, 2026 12:00 AM

அ.ம.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என, 3,000த்துக்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி, தர்மபுரி டவுனில் உள்ளதிருமண மண்டபத்தில் சமீபத்தில் நடந்தது.
இதில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி பேசுகையில், '2011 முதல் நடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பதவி சுகம் அனுபவித்தவர்கள், முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட நிலையில், 2026 சட்டசபை தேர்தலுக்கு பின், அவர்களின் உண்மை முகத்தை வெளிக்காட்டினர்.
'தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏன் என்றால், எனக்கு அரசியலில் நிறைய அனுபவம் உண்டு' என்றார்.
இதைக் கேட்ட தொண்டர் ஒருவர், 'ஆமாம்... அண்ணனுக்கு நிறைய அனுபவம் உண்டு... முதல்ல ஓ.பி.எஸ்., அணிக்கு போனாரு... அந்த குதிரை ஓடாதுன்னு தெரிஞ்சதும், 'யூ டர்ன்' போட்டு அ.தி.மு.க.,வுக்கே வந்துட்டார்' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்து சிரித்தனர்.
