PUBLISHED ON : செப் 25, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமிபேட்டி: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்'நாட்டுக்கு மிக அவசியமானது. ஸ்டாலின்,இத்திட்டம் சாத்தியமில்லாதது என கூறியுள்ளார். அவர் கருத்து தவறு. தமிழகத்தில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., எங்களுடன் கூட்டு சேர்ந்தாலும், எங்கள் தலைமையில் தான் கூட்டணி உருவாகும். ஏனெனில்,
பா.ஜ., மத்தியில் ஆளுங்கட்சி.எப்படியும் அ.தி.மு.க., இவங்களோடு கூட்டணிக்கு வரப்போறதில்லைன்னு தெரிஞ்சு தான், 'கெத்தா' எங்க தலைமையில் தான் கூட்டணின்னு அடித்து சொல்றாரோ?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி, ஆகம கோவில்களில் அர்ச்சகர்களாகநியமிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியும், அவமரியாதையும் சுட்டிக் காட்டப்பட்ட பிறகும் அது தொடர்கிறது. இதை சரி செய்ய வேண்டிய தமிழக அரசு, அனைத்து அவமதிப்புகளையும், அநீதிகளையும் மூடி மறைக்க முயற்சி செய்வது கடும்
கண்டனத்திற்குரியது.நடவடிக்கை எடுத்தால், தவறு நடந்ததை அரசே உறுதி செய்தது போல ஆகிடுமே... அதான் கண்டுக்காம விட்டுட்டாங்க போல
கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி பேட்டி: பா.ஜ.,வின் பி டீமாக மட்டுமல்ல, அங்கமாகவும், குரலாகவும் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி இனி பா.ஜ.,வாக தான் செயல்படும். அதனால்,ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்., தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளது என்ற பி.எஸ்.பி., குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆம்ஸ்ட்ராங்
கொலை வழக்கில் காவல்துறை திறம்பட செயல்படுகிறது.நெருப்பில்லாம புகையுமா...? 'ஆதாரம் இருந்தால், சட்டம்
தன் கடமையை செய்யட்டும்'னு சொல்லாம, கண்டுக்காம விட சொல்றீங்களே!
புதுச்சேரி முன்னாள்கவர்னர் தமிழிசை பேட்டி: காங்கிரசுக்கு முடிவுரைஎழுதிய தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, காமராஜர் ஆட்சி நடத்துவோம் என, காங்கிரசார் கூறி வருகின்றனர்.உண்மையில் காமராஜர்ஆட்சியை நாங்கள் தான் நடத்தி வருகிறோம். தமிழகத்தில் ஊழல் இல்லாத வளர்ச்சி திட்டங்களை, காமராஜர் அறிவித்தது போல பிரதமர் மோடியும் ஊழல் இல்லாத வளர்ச்சி
திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.தமிழக காங்கிரசார் இன்னும் கொஞ்சம் நாளில் காமராஜர் என்ற பெயரையே மறந்துடுவாங்க பாருங்க!