PUBLISHED ON : நவ 12, 2024 12:00 AM

நடிகர் விஜயின் த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் பேச்சு: சட்டசபை
தேர்தலுக்கு இன்னும், 18 மாதங்கள் மட்டுமே உள்ளன.வரும் 2026ல் முதல்வர்
பதவியில் விஜயை உட்கார வைக்க நாம் உழைக்க வேண்டும். கட்சி துவங்கும் முன்பே
விஜய் படத்தை வைத்து உள்ளாட்சிகளில், 127 இடங்களில் வெற்றி பெற்றோம்.
தற்போது, கட்சி ஆரம்பிக்கப்பட்டதால் இனி எல்லாமே வெற்றி தான்.
'தொண்டர்கள்
உழைப்பு மட்டுமே போதும்... சென்னை, நீலாங்கரை வீட்டில் இருக்கும் விஜயை,
டைரக்டா கோட்டைக்கு அனுப்பிடலாம்'னுநினைக்கிறாரோ?
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேட்டி: தி.மு.க., கூட்டணி, கொள்கைசார்ந்த கூட்டணி. நாட்டின் மதச்சார்பின்மையை காப்பதுமுக்கிய கொள்கை. 'இண்டியா'கூட்டணியை பிளவுபடுத்த முடியாது. வெற்றி வாய்ப்புகள்மற்றும் எதிர்ப்புகளை வலுவாகவெளிப்படுத்தக் கூடிய கூட்டணி. இண்டியா கூட்டணிமிக வலிமையாக உள்ளது.
பா.ஜ., எதிர்ப்பு என்ற ஒரே கொள்கையால் உருவான கூட்டணி... இன்று வரை கூட்டணிஉடையாமல் இருக்கவும், அது ஒன்று மட்டும் தான் காரணம்!
தமிழக காங்., துணைத் தலைவர் வாழப்பாடி ராம.சுகந்தன் அறிக்கை: கடலுார் மாவட்டம், மஞ்சக்கொல்லை கிராமத்தில் அரங்கேறிய சம்பவம், இரு சமூகத்தினரிடம்பதற்றத்தை ஏற்படுத்தியதாகஇரு தரப்பினரும் தெரிவிக்கின்றனர். கடலுாரில் ஏன் திடீரென இரு பிரிவினருக்கிடையே சண்டை உருவாகிறது?இதற்கு ஒரே காரணம், நடிகர் விஜய் ஆரம்பித்த கட்சியின் பின்னால் எவரும் செல்லக்கூடாது என்பது தான். இரு கட்சிகளுக்குமே ஜாதியை வைத்து அரசியல் செய்ய வேறு எதுவும் இல்லை.
அந்த ரெண்டு கட்சிகளில் ஒன்று இவங்க, 'இண்டியா' கூட்டணியில் இருக்கிற கட்சி தானே... ஒரு போன் போட்டு, 'அட்வைஸ்' பண்ணலாமே!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன், பருவகாலதொற்று நோய்கள் தீவிரமடைந்து, பாதிக்கப்படுவோரின்எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத் துறையின் அலட்சிய போக்கு கடும் கண்டனத்துக்குரியது. அரசு இனியாவது விளம்பர அரசியலை தவிர்த்து, டெங்கு பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவேண்டும்.
எங்க... துறையின் அமைச்சருக்கு மாரத்தான் ஓடவே நேரம் சரியா இருக்குதே!

