PUBLISHED ON : ஆக 08, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி பேட்டி: மத்திய அரசின் பட்ஜெட்டில்,3 லட்சம் கோடி, பெண்கள் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 11.11 லட்சம் கோடி ரூபாய் கட்டமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு ஆட்சியில் உலகளவில் விவசாயம், பால், பருப்பு, மசாலா போன்ற உற்பத்தி துறையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
சர்க்கரை போன்ற உணவு பொருள் உற்பத்தியில், 2வது இடத்தில் உள்ளது.இவை எல்லாம் தான், எதிர்க்கட்சிகளின் கண்களை உறுத்துகிறதோ?
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தமிழக அரசுஏற்கனவே பத்திரப்பதிவு கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு,
தண்ணீர் வரி உயர்வு வாயிலாக, மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றிஉள்ளது. இப்போது, கூடுதலாக கட்டடம் கட்டுவதிலும் கட்டணத்தை உயர்த்தி, மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கு
கிறது. இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.கோரிக்கையோட நிறுத்திக்கிட்டா எப்படி...? மாபெரும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டா குறைஞ்சா போயிடுவாரு?
தமிழக பா.ஜ., மூத்ததலைவர் எச்.ராஜா பேட்டி: தமிழகத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஆனால், தமிழக பட்ஜெட்டில், 27 மாவட்டங்களின் பெயர் இல்லை. அப்படி என்றால் அந்த, 27 மாவட்டங்களுக்கு எந்தத் திட்டமும் இல்லை என்று அர்த்தம் ஆகாது.
அரசியல் கத்துக்குட்டிகளான உதயநிதி உள்ளிட்டவர்கள், 'தமிழகம் ஒரு ரூபாய் மத்திய அரசுக்கு வரியாக செலுத்தினால், 29 பைசா தான் திரும்ப கொடுக்கிறது' என்று முழு பொய் கூறுகின்றனர்.
அப்படி என்றால், தமிழகத்துக்கு மத்திய அரசு எவ்வளவு ஒதுக்கியுள்ளது என்ற புள்ளி விபரங்களை இவர் புட்டு, புட்டு வைக்கலாமே!
த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா பேட்டி: த.மா.கா.,வுக்கு பணபலம், அதிகாரபலம் கிடையாது. காமராஜர்,
மூப்பனார் வழிகாட்டிய கொள்கை, கோட்பாடு கொண்ட நேர்மையான அரசியலை நடத்தி வருகிறோம். துரதிர்ஷ்டவசமாக, மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அ.தி.மு.க., எங்களுக்கு எதிரி கட்சி அல்ல. பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் என்பதால் பா.ஜ.,வுடன் கூட்டணி
அமைத்தோம். வரும் 2026 சட்டசபை தேர்தலில் வலிமையான கூட்டணியில் த.மா.கா., இடம் பெறும். 'அ.தி.மு.க., கூட்டணிக்கு
வர தயாரா இருக்கோம்'னு தெளிவா சொல்லிட்டாரு... அ.தி.மு.க., இழுத்து போடுமா?