PUBLISHED ON : ஆக 13, 2024 12:00 AM

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: பள்ளி
வகுப்பறை கட்டடங்கள் சீரமைக்கப் படாமல் உள்ளது; ஆசிரியர்களுக்கு ஊதியம்
கொடுக்க முடியவில்லை. இந்நிலையில், 'பார்முலா 4' கார் பந்தயம் தேவைதானா?
கல்லுாரி மாணவியரை குறி வைத்து, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. என்
பின்னால் இளம்பெண்கள், இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் திரள்வதை தடுக்க
தமிழ்ப்புதல்வன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
கார் பந்தயம் நடத்துறது கூட, பைக், கார், ஆட்டோ ரேஸ் நடத்தும் இளசுகளை தங்கள் பக்கம் இழுக்குற வேலையோ என்னமோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: 'இளைஞர்களுக்கு பாதிப்பு தரும் போதை பொருட்களை விற்க மாட்டோம் என, வணிகர்கள் உறுதியேற்க வேண்டும்' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசி உள்ளார். அப்ப அரசு டாஸ்மாக்கில் விற்பனை செய்வதெல்லாம், சத்து மருந்து டானிக்கா எஜமான்?
இதே கேள்வியை அமைச்சர் பேசிய போதே பல வணிகர்கள், 'மைண்ட் வாய்ஸ்'ல கேட்டிருப்பாங்க... அதுக்கெல்லாம் அவர் பதில் சொல்வாரா என்ன?
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை:திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசு அதிகாரிகளுக்கு பொலீரோ வாகனம் வழங்கப்பட்டது. வாகனத்தில் அரசு முத்திரையான, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோபுரம்பொறித்த, 'வாய்மையே வெல்லும்' வாசகத்துடன் கூடிய, முத்திரை ஸ்டிக்கர் ஒட்டாமல், தமிழக அரசு என்று மட்டும் எழுதி இருப்பதுஏன் என்ற கேள்வி எழுகிறது. பாரத அரசு முத்திரையை இடம்பெற செய்து, தமிழக அரசு முத்திரையை கவர்னர் குறிப்பிடாத போது கண்டனம் தெரிவித்தவர்கள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர்?
ஸ்டிக்கர் ஒட்டுறதுல கில்லாடியான திராவிட மாடல் ஆட்சியாளர்கள், இந்த ஸ்டிக்கர்ல ஏன் கோட்டை விட்டாங்க?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: மன்னார்குடியில் நடு ரோட்டில் மூன்று பேர் கும்பல், மாரிமுத்து என்பவரை கொலை செய்துள்ளது. அரசியல் காரணமோ, தனி நபர் விரோதமோ, எதுவாக இருந்தாலும், கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. காவல் துறை மீதான பயம், மரியாதை, அறவே துளிர் விட்டு போய் விட்டது. நீதித்துறை உடனுக்குடன் தீர்ப்பளித்து, குற்றவாளிகளை விரைவில்தண்டிப்பதே, குற்றங்கள் குறையும் வாய்ப்பை உருவாக்கும்.
சட்டம் - ஒழுங்கு விஷயத்துல தமிழக அரசு மேல நம்பிக்கை போயிடுச்சா... நேரா நீதித்துறைக்குகோரிக்கை வைக்கிறாரே!

