PUBLISHED ON : ஆக 18, 2024 12:00 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: தஞ்சாவூர் அருகே கஞ்சா போதை கும்பலால், இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் துவங்கி, பாலியல் வன்கொடுமை வரை,தமிழகத்தில் அரங்கேறும் பல்வேறு குற்றச் சம்பவங்களுக்கும், தி.மு.க.,வினருக்குமானதொடர்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கண்டும், காணாமல் கடந்து செல்லும் தி.மு.க., தலைமையின் அலட்சிய போக்கு, கடும் கண்டனத்துக்குரியது.போதைப்பொருள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த முடியாம, தி.மு.க.,வினரையும் அடக்கி வைக்க முடியாம முதல்வர் பாடு திண்டாட்டமாத்தான் இருக்கு!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்அறிக்கை: பட்டியலின, பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பு, அதாவது, 'கிரீமிலேயர்' முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை அமல்படுத்தப் போவதில்லை என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் அணுகுமுறை ஓ.பி.சி.,க்கும் நீட்டிக்கப்பட வேண்டும்.தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு இருக்கும் முக்கியமான கூட்டாளி நீங்கதான்... அழுத்தமா கோரிக்கை வைச்சா காது கொடுத்து கேட்பாங்க!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: பார்லிமென்ட் எதிர்கட்சித்தலைவராக பொறுப்பு வகிக்கும் ராகுலுக்கு, டில்லியில் நடந்த சுதந்திர தினவிழாவில், கடைசி வரிசைக்குமுன்வரிசையில் மத்தியஅரசு இடம் ஒதுக்கியுள்ளது.இதற்கு விளக்கம் அளித்துள்ளபாதுகாப்பு அமைச்சகம், ஒலிம்பிக் வீரர்களை கவுரப்படுத்த, அவர்களை முன் வரிசையில் அமர்த்தியதால் இந்த நிகழ்வு ஏற்பட்டதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதை ஏற்க முடியாது...ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்களை முன்வரிசையில் அமர்த்தி கவுரப்படுத்துவதையா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: எம்.ஜி.ஆர்., ஆட்சியில் உருவாக்கப்பட்ட சென்னை அண்ணா பல்கலையை, 2007ல் தி.மு.க., ஆட்சியாளர்கள் சிதைத்து, ஆறு உறுப்பு பல்கலைகளாக உருக்குலையச் செய்தனர். ஜெயலலிதா ஆட்சியில், 2011 - 12ல் ஆண்டு அவற்றை மீண்டும் இணைத்து, ஒரே பல்கலையாக ஏற்படுத்தியதன் விளைவாக தான், மாநில அளவிலும்,தேசிய அளவிலும், அண்ணா பல்கலை சிறப்பு பெற்றுஉள்ளது. எனவே, அ.தி.மு.க., அரசுக்கு தான் இந்த பெருமை சேருமே தவிர, தி.மு.க.,வுக்கு பங்கு எதுவும் இல்லை.பல்கலை விவகாரத்துல இவங்க ரெண்டு பேரும் ஆடுற அரசியல் விளையாட்டை, அண்ணாதுரையின் ஆன்மாவேமன்னிக்காது!

