PUBLISHED ON : செப் 21, 2024 12:00 AM

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை:
'தமிழகத்தில்
முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தியா முழுதும் ஒருமித்த
கருத்துடன் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்' என, திருமாவளவன் கூறுகிறார்.
இந்தியா முழுதும் 'நீட்' தேர்வு சிறப்பாக நடத்தப்படுகிறது. அதில்,
தமிழகத்திற்கு மட்டும் ஏன் விலக்கு கேட்கிறீர்கள்? மக்களை திசை திருப்ப
தி.மு.க., போடும் தாளத்திற்கு, நாடகம் ஆடும் தலைவராக திருமாவளவன் உள்ளார்.
கூட்டணி கட்சி தலைமை மனம் குளிரும்படி நடந்துக்கிட்டா தானே, நாளைக்கு தேர்தலில் ஒண்ணு, ரெண்டு சீட்களை கூடுதலா போட்டு குடுப்பாங்க!
தமிழக பா.ஜ., பொருளாளர்எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: மது ஒழிப்பு மாநாடு அறிவித்த திருமாவளவன், 'அ.தி.மு.க., உட்பட எந்த கட்சியும் பங்கேற்கலாம்' என்றார். அதன்பின், 'பா.ஜ., மற்றும் பா.ம.க.,வுக்கு இடமில்லை' என்றார். ஸ்டாலினை சந்தித்த பின், 'தேசிய மதுவிலக்கு கொள்கையை, மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்' என, முதல்வரிடம் மனு கொடுத்ததாக கூறினார். இதிலிருந்து மது ஒழிப்பு மாநாடு அரசியலுக்கானது என்பது தெரிகிறது.
திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு குறித்த பேச்சு துவங்கிய முதல் நாளே, அது அரசியலுக்கானது தான்னு பச்சை குழந்தைக்கு கூட தெரிஞ்சிருக்கும்... இவருக்கு இப்ப தான் தெரியுது போல!
தே.மு.தி.க., பொதுச்செயலர்பிரேமலதாவின் மகன் விஜயபிரபாகரன் பேட்டி: இந்த நிமிடம் வரை, தே.மு.தி.க., - அ.தி.மு.க., கூட்டணியில்தான் நீடிக்கிறது; வரும் 2026 தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருந்த தே.மு.தி.க., 20 ஆண்டுகள் பழமையானது. புதிதாக கட்சி துவங்கிய நடிகர் விஜய், எதற்காக கட்சி துவங்கினார் என்பது அவரது நிலைப்பாடுதெரிந்த பின் தான் பேச முடியும்.
இவங்களோட பழமையான கட்சியை விஜயின் புதிய கட்சி ஒரே தேர்தலில், 'ஓவர்டேக்' பண்ணிடுமே!
தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு பேட்டி: தமிழகத்தில் காலாவதிசுங்கச்சாவடிகளை மூட பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, நேரிலும்வலியுறுத்தினோம். மத்திய அரசு, 'அவை தொடர்ந்து செயல்படும்'என்கிறது. கட்டணத்தைகுறைத்து வசூலிக்கவலியுறுத்தி வருகிறோம்; அக்கோரிக்கையையும்கண்டு கொள்ளவில்லை.
ஏத்திய மின் கட்டணம், சொத்து வரியை குறைக்க மக்கள் வச்ச கோரிக்கையை இவங்க மட்டும் கண்டுக்கிட்டாங்களா?