PUBLISHED ON : அக் 11, 2024 12:00 AM

சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் அறிக்கை: தொழிற்சங்கம் என்பது ஒரு
தொழிலாளியின் அடிப்படை உரிமை. தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த
பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து
வரும் சாம்சங் தொழிலாளர்கள், தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு
வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார்
நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக க்ஷமோசமான அணுகுமுறை.
இவரது சினிமாக்கள் சரிவர ஓடாம போயிட்டதால, அரசியல் பக்கம் பார்வையை திருப்புறாரோ?
மனித நேய மக்கள் கட்சியின்தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை: ஹரியானாவில், ஆம் ஆத்மி கட்சியுடன் காங்.,கூட்டணி வைத்திருந்தால், பா.ஜ., மூன்றாம் முறை ஆட்சி அமைப்பதை தடுத்திருக்க இயலும். இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கி அதிகரிப்பு, 'இண்டியா'கூட்டணியின் எதிர்காலத்திற்குபுது உத்வேகத்தை வழங்கிஇருக்கிறது.
'கீழே விழுந்தாலும் மீசையில்மண் ஒட்டலை' என, சொல்கிறாரோ?
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: ஹரியானாவில், 'இண்டியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ளஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தனித்தனியாக நின்றதால் ஓட்டுகள் சிதறி விட்டன. இனிவரும் மாநில சட்டசபை தேர்தல்களில், 'இண்டியா' கூட்டணியில் உள்ள கட்சிகள்ஒற்றுமையாக இருக்க வேண்டும்.ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடம். கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைப்பதில், காங்கிரஸ் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.
எவ்வளவு அடி வாங்கினாலும்,'பெரியண்ணன்' மனநிலையில் இருந்து காங்., இறங்கி வர்ற மாதிரி தெரியலையே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை:'சாம்சங்' நிறுவனத்தின் தொழிலாளர்கள் பஸ்சில் செல்லும்போது, போலீசாரைவைத்து மிரட்டியுள்ளனர். தொழிலாளர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருப்பது, பெரும் சந்தேகங்களை ஏற்படுத்திஉள்ளது. 'சங்கம் அமைக்கக் கூடாது' என்ற சாம்சங் நிறுவனத்தின் கோரிக்கையை,முதல்வர் ஏற்றுக் கொண்டாரா...கூட்டணிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் போராடுவதை கூட அனுமதிக்காதது ஏன்? சொல்லவும்,மெல்லவும் முடியாத நிலையில் கூட்டணிக்கட்சி தலைவர்கள் தவிக்கின்றனர்.
தி.மு.க., கூட்டணிக்கட்சி தலைவர்களின் தவிப்புக்கு, தண்ணீராக அ.தி.மு.க., மாறுமா?