PUBLISHED ON : நவ 15, 2024 12:00 AM

முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலருமான டாக்டர் சரவணன் அறிக்கை:
'அரசு ஊழியர்களுக்குபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய
திட்டத்தை செயல்படுத்துவோம். தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் அரசு
ஊழியர்கள்பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என்பது போன்ற வாக்குறுதிகளை வழங்கி
தான், 2021 தேர்தலில்அரசு ஊழியர்களின் 16 லட்சம் ஓட்டுகளை,
தி.மு.க.,பெற்றது. அதில், 3 லட்சம் அரசு ஊழியர்கள்தி.மு.க.,வுக்கு எதிராக
ஓட்டு போட்டிருந் தால்,இன்றைக்கு அ.தி.மு.க., ஆட்சியில் இருந்திருக்கும்.
'மேலே
சொன்ன வாக்குறுதிகளை எல்லாம், ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தில்
நிறைவேற்றுவோம்'னு சொல்லிப் பாருங்க... 16 லட்சம் ஓட்டுகளையும் அள்ளிடலாம்!
தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை: 'ஆரியம், திராவிடம்என்பது கட்டுக்கதை' என்று சொன்ன அம்பேத்கரை, திராவிடன் எனக்கூறி, மலிவுஅரசியல் செய்கிறார் திருமாவளவன். 'திராவிடம் என்பது நிலப்பரப்பு; மரபினம்அல்ல' என்பதை அம்பேத்கர் ஆதாரப்பூர்வமாக நிரூபித்ததுதெரியாமல் அல்லது தெரிந்தேமறைத்து, அம்பேத்கர்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது ஏனோ? தி.மு.க.,வுக்கு பல்லக்கு துாக்க, அதிகார அரசியலில் ஈடுபட, ஆர்.எஸ்.எஸ்.,சையும், பா.ஜ.,வையும், சனாதனத்தையும் குறை சொல்வது, தரம் தாழ்ந்த அரசியல்.
களங்கமெல்லாம் கண்ணுக்குத்தெரியாது; இப்போதைக்கு, 'திராவிடம்' தான் மார்க்கெட்ல காஸ்ட்லி வார்த்தையா இருக்குது!
தி.மு.க.,வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட்,'நான் பதவியில் இருக்கும்போது யாரையேனும் காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங் கள்'என, உருக்கமாக வேண்டுகோள் விடுத்து பணிநிறைவு செய்துள்ளார். அவர் பண்புள்ள மனிதர்.
அவரது இந்த பண்பை, இன்றைய இளம் வக்கீல்கள் ஒரு பாடமா எடுத்துக்கணும்!
த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா பேட்டி: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் எங்கு சென்றாலும், ஆய்வு என்ற பெயரில் ஒரு மருத்துவமனைக்குள் நுழைந்து, அதை வீடியோவாக வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார். உண்மையிலேயே துறையை கட்டுப்பாட்டில்வைத்திருந்தால், அரசு டாக்டர்பாலாஜிக்கு கத்திக்குத்து நிகழ்வு நடந்து இருக்குமா?
கத்திக்குத்து சம்பவம், தனிப்பட்ட நபர் செய்தது. அவருக்கு அந்த துணிச்சலை யார் கொடுத்ததுஎன்பதுதான் ஆச்சரியமான விஷயம். அதற்காக, அமைச்சரைஎப்படி பொறுப்பாக்க முடியும்?