sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : நவ 25, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 25, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக, பா.ஜ., சமூக ஊடக பிரிவின் மாநில பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை:

நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதில் இருந்து, தன்னலமற்ற செயலால், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுடன், வலுவான, குறிப்பிடத்தக்க நற்பெயரை வளர்த்துக் கொண்டு உள்ளார். அவரது நிலையான பார்வை, தலைமைத்துவம், ராஜதந்திரம் ஆகியவை, அவருக்கு உலகத் தலைவர்கள் மத்தியில் மகத்தான மரியாதையை பெற்று தந்துள்ளது.

அது தான், இங்க இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அடிவயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டிய மாதிரி எரிச்சலையும் தருது!

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணைச் செயலர், டாக்டர் சரவணன் பேட்டி: தற்போது மழைக்காலம் என்பதால், பல்வேறு பள்ளிகளில் சுவர்கள் விரிசல் விட்டும், மேல் பூச்சு விழுந்தும் வருவதாக செய்திகள் வருகின்றன. வருங்கால துாண்களான மாணவர்கள் நலனை எண்ணி, போர்க்கால அடிப்படையில் உடனடியாக பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து சீர்செய்ய வேண்டும். இல்லையென்றால், மாணவர்கள் உயிருக்கு முதல்வர் ஸ்டாலின் அரசு தான் பொறுப்பு.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், 'பொறுப்பாக' செயல்பட்டால், முதல்வர் இதற்கு பொறுப்பேற்க தேவையில்லையே!

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: வேலுாரை தொடர்ந்து, நீலகிரியிலும் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது, கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த கொடுமைகள், தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதையே வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற குற்ற சம்பவங்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை, இனியாவது தடுத்து நிறுத்த வேண்டும்.

இதுலயும், 'தனிப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட விஷயம்'னு அரசு பூசி மெழுகாம நடவடிக்கை எடுக்கணும்!

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டி யில், 'புள்ளிகளை முறையாக வழங்கவில்லை' என, நடுவர்களிடம் முறையிட்ட தமிழக கபடி வீரர்கள் மீது, வட மாநில வீரர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தமிழக பிள்ளைகள் மீது கொடுந் தாக்குதல் நடத்தியதோடு, 'தமிழகத்திற்கு திரும்பி செல்லுங்கள்' எனக் கூறி அவமதித்திருப்பது கண்டனத்துக்குரியது.

தி.மு.க., கூட்டணி கட்சி, எம்.பி.,க்கள், இந்த பிரச்னையை பார்லிமென்டில் எழுப்புவாங்களா?






      Dinamalar
      Follow us