PUBLISHED ON : நவ 28, 2024 12:00 AM

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: மஹாராஷ்டிர
மாநிலத்தில் தலித் ஓட்டுகள் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில்
முக்கிய பங்காற்றுகின்றன. தலித் ஓட்டுகள், 'இண்டியா' கூட்டணிக்கு
செல்லாமல் சிதறடிக்கும் விதமாக எல்லா தொகுதி களிலும் பகுஜன்
சமாஜ் கட்சியும், பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வி.பி.ஏ.,
கூட்டணியும் வேட்பாளர் களை நிறுத்தின. பா.ஜ., -- காங்., என இரண்டு
கூட்டணியையும் எதிர்ப்பதாக அவர்கள் கூறினாலும், பா.ஜ.,வுக்கு
ஆதரவாக தலித் ஓட்டுகளை பிரிப்பதற்குதான், அவர்கள் வேட்பாளர்களை
நிறுத்தினர் என்ற விமர்சனம் பரவலாக உள்ளது.
அதாவது, 2016
சட்டசபை தேர்தலில், மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் நீங்க பார்த்த
வேலையை, மஹாராஷ்டிராவிலும் பார்த்திருக்காங்க... அப்படித்தானே!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: முதல்வர் ஸ்டாலின், அதானியைசந்தித்தாரா, இல்லையா என தெரியாது. ராமதாசுக்கு அது எப்படி தெரியும்? ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். இல்லையென்றால் ஆணித்தரமாக எங்கு அவர் சந்தித்தார் என, சொல்ல வேண்டும்.
அது சரி... இப்படி ஒரு சர்ச்சை வந்தும், 'அதானியை சந்திக்கவில்லை' என, ஆளும் தரப்பு மறுப்பு தெரிவிக்காதது ஏன்?
இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர் அகமது பேட்டி: 'வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள், கடை வாடகை தொகையில், 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,யை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும்' என, ஜி.எஸ்.டி., கவுன்சில்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு, ஏழை, நடுத்தர வணிகர்கள் மீது தொடுத்துள்ள மோசமான தாக்குதல். மத்திய அரசின் இந்த முடிவை வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனே திரும்பப் பெற வேண்டும்.
வரி கட்டுவதற்கு மறுத்தால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை எப்படி செய்ய முடியும்?
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேட்டி: முதன்முறையாக மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. பா.ஜ.,வுக்கு கிடைத்த இந்த வெற்றி, 2026ம் ஆண்டின் தமிழக சட்டசபை தேர்தலுக்குஅச்சாரம். லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க விரும்பாத கட்சிகள் எல்லாம், வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணியில்இணைய ஆர்வம் காட்டும்.
முதலில், தமிழகத்தில்பிரதான எதிர்க்கட்சியாகுங்க...அப்புறம் ஆட்சியைப் பிடிக்கலாம்!