PUBLISHED ON : டிச 22, 2024 12:00 AM

'தமிழக காங்., துணைத் தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் அறிக்கை:ஒரு சொட்டு நீர் கூட, கடலுக்கு போகாத தமிழகம் வேண்டும்
என்ற வரத்தை கடவுளிடம் கேட்கிறேன்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
கூறியுள்ளார். இவர் படிக்கும்போது, நீர் சுழற்சி பற்றிய பாடத்தை
படிக்காமல் விட்டு விட்டார் போலும்... மழைநீர் நதியாக ஓடி கடலில்
கலக்கும் போது, கடலில் உள்ள கோடிக்கணக்கான மீன்களுக்கும்,
ஜீவராசிகளுக்கும் உணவு கிடைக்கும். மழை நீர் கடலில் கலப்பது
அவசியம். மழைநீர் கடலில் கலக்கக் கூடாது என்ற வரத்தை, கடவுளிடம்கேட்டதை ராமதாஸ் திரும்ப பெற வேண்டும்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி பேச்சு: முதல்வர், மக்களுக்கு வழங்கும் கடன் உதவிகளை எல்லாம் கடனாக பார்க்கவில்லை. உங்கள் மீது வைத்து உள்ள நம்பிக்கையாகவேபார்க்கிறார். மக்களாகிய நீங்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும்; ஒவ்வொருவரும் தொழில் முனைவோராகி, குறைந்தபட்சம் 10 பேருக்காவது வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
'அரசு வேலைக்கு யாரும் ஆசைப்படாதீங்க'ன்னு சொல்லாமசொல்றாரோ?
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு: கோவிலுக்குள் நுழைந்தால், அக்கோவிலுக்குரிய கடவுள் பெயரை சொல்வது தான் வழிபடுவோரின் வாடிக்கை. அதேபோல், பார்லிமென்ட் உள்ளே நுழைந்தால், அம்பேத்கர் பெயரை தானே சொல்ல முடியும். கோவிலில் கடவுள்; பார்லிமென்டில் அம்பேத்கர். இதையெல்லாம்அறியாதவரா உள்துறை அமைச்சர். அவருக்கு அம்பேத்கர் மீது அவ்வளவு வெறுப்பு.
'அவருக்கு வெறுப்பு வந்து ஏதாச்சும் ஏடாகூடமா பேசணும்'னுதிட்டம் போட்டு தானே அவரை கொந்தளிக்க வச்சுட்டீங்க!
தமிழக பா.ஜ., விவசாய அணிதலைவர் ஜி.கே.நாகராஜ் பேட்டி: கோவை இருகூரில் இருந்து சூலுார் வழியாக முத்துார் வரை, விவசாய நிலங்களில் செல்லும் எரிவாயு குழாய் பதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், டில்லியில் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதிகாரி பிஜு கோபிநாத்துடன் ஆலோசித்தோம். அவரிடம், நெடுஞ்சாலையில் கொண்டு செல்வதற்கான மாற்று பாதைக்கான வரைபடத்தை, விவசாயிகள் குழு வழங்கியது;மாற்றுப் பாதையை மறுஆய்வுசெய்வதாக அதிகாரிகள் உறுதிஅளித்தனர். விவசாயிகளைகாக்கும் அரசாக பா.ஜ., அரசு விளங்குகிறது.
அவசரப்படாதீங்க... பரிசீலனையை பாதியில் விட்டுட்டாங்கன்னா நிலைமை சிக்கலாகிடும்!