PUBLISHED ON : ஜன 03, 2025 12:00 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில துணைசெயலர்
டாக்டர் சரவணன் அறிக்கை: அண்ணா பல்கலை மாணவியை, தி.மு.க.,வைச் சேர்ந்த
ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை
செய்த சம்பவம், நெஞ்சை
உலுக்கி உள்ளது. மற்ற அரசு துறைகளில் சீர்கேடு நடந்தால், அதன்
அமைச்சர்களை முதல்வர் எச்சரிக்கை செய்யலாம். ஆனால், முதல்வர்
கையில்
வைத்திருக்கும் உள்துறையே இன்றைக்கு சீர்கெட்டுப்
போய்விட்டது. அப்படி என்றால், அதை எச்சரிக்கை செய்வது,
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் கடமை அல்லவா?
தமிழக காங்., - எஸ்.சி., துறை தலைவர் ரஞ்சன் குமார் அறிக்கை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்ய போதிய இடம் வழங்காததன் மூலம், அவரது கண்ணியத்திற்கும், ஆளுமைக்கும் மத்திய அரசு நியாயம் செய்யவில்லை. இறுதிச் சடங்கில் அவரது குடும்பத்தினருக்கு இடம் கிடைக்காமல் தவிக்கவிட்டு துன்பத்தில் மகிழ்ந்த மோடி அரசை, 'சாடிஸ்ட்' அரசு என்றுசொல்வதே பொருத்தமாக இருக்கும்.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் உடலை, காங்., ஆபீசில்அஞ்சலிக்கு வைக்காமல் தடுத்தவர்கள், 'சாடிஸ்ட்' இல்லையா?
அ.ம.மு.க., பொதுச்செயலர்தினகரன் அறிக்கை: மாநிலத்தின்தலைநகர் துவங்கி, அனைத்துபகுதிகளிலும் நேரடியாகவும்,'ஆன்லைன்' வழியாகவும்,தாராளமாக புழங்கும் போதைப்பொருள் விற்பனையை, பலமுறை சுட்டிக்காட்டியும், எந்தவித நடவடிக்கை யும் எடுக்காத தி.மு.க., அரசும், அதன் முதல்வரும், விளம்பரங்களின் வழியே விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல நாடகமாடுவது, கடும் கண்டனத்துக்கு உரியது.
போதை ஒழிப்புக்கு என்ன நடவடிக்கை எடுத்தோம்னு நாளைக்கு கணக்கு காட்ட வேண்டாமா?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: ஏறத்தாழ நான்காண்டு தி.மு.க., ஆட்சியில், மக்களின் மன நிலையையும், மதிப்பீட்டையும் தங்களுக்கு உணர்த்தி, எஞ்சியுள்ள காலத்தில் தங்களை சரிப்படுத்திக் கொள்வதற்கு கொடுக்கப்பட்ட சமூகத்தின் சமிக்ஞையாக, முதல்வர் படம் மீது செருப்பு வீசிய மூதாட்டியின் கோபத்தை தி.மு.க., எடுத்துக்கொள்ள வேண்டும்.
'நாலு வருஷம் தப்பு பண்ணிட்டீங்க... கடைசி வருஷமாவது பிராயச்சித்தம் தேடுங்க'ன்னு சொல்றாரோ?

